×

சென்னை வீடுகள் மின்சாரம் அளவிட ஸ்மார்ட் மீட்டர்கள் படிப்படியாக பொருத்தப்படும் : ஓபிஎஸ் அறிவிப்பு

சென்னை : 2020- 21ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. தமிழக நிதியமைச்சராக 10வது முறையாக தமிழக பட்ஜெட்டை  ஓ பன்னீர் செல்வம் தாக்கல் செய்தார். அப்போது பேசிய அவர், தொடர்ச்சியாக பெறப்படும் முதலீடுகள் தமிழகத்தில் வேலைவாய்ப்புகளை உருவாக்கித் தரும் என்று கூறினார். மேலும் உலக பொருளாதார சூழலில் வீசும் எதிர்காற்றை தமிழகமும் எதிர்கொண்டு வருகிறதுஎன்றும் பொருளாதார நெருக்கடிகளை தமிழகம் திறமையாக சமாளித்துள்ளது என்றும் தெரிவித்தார்.  மேலும் அவர் உரையில் கூறியது குறிப்புகளாக பின்வருமாறு...

*சென்னை தியாகராய நகர் பகுதியில் 1.41 லட்சம் மின் நுகர்வோர்களுக்கு ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்தப்பட்டு வருகின்றன

*சென்னை நகரின் பிற பகுதிகளிலும் ஸ்மார்ட் மீட்டர்கள் படிப்படியாக பொருத்தப்படும்

*அரசுப் பணிகளிலும் பொதுத்துறை நிறுவனங்களிலும் பணிநியமனங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கு 4 சதவீத இடஒதுக்கீடு

*மாற்றுத் திறனாளிகளுக்கு 4 சதவீத இடஒதுக்கீடு வழங்குவதை உறுதிசெய்யும் வகையில் நடவடிக்கை

*நிரப்பப்படாமல் நிலுவையில் உள்ள அனைத்து காலிப் பணியிடங்களுக்கும் சிறப்பு ஆட்சேர்ப்பு பணிகள் நடத்தப்படும்

Tags : homes ,announcement ,Chennai ,OPS ,OPS Announcement , Budget, Finance Minister, O Paneer Wealth, filed
× RELATED திருவண்ணாமலை – சென்னை இடையே நாளை முதல்...